காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கணட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே 24 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில், 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வேளாண் துறையின் செயலாளர் ககந்தின் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சந்திரமோகன் ஐஏஎஸ், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா ஐஏஎஸ், கரூர் மாவட்டத்திற்கு கோபால் ஐஏஎஸ், திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக் ஐஏஎஸ், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐஏஎஸ் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குருவை சாகுபடிக்காக திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் பயனடைய உள்ளனர். அதற்கு முன்னதாகவே அணைகள் மற்றும் ஏரிகளை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது இந்த 392 பணிகளை மேற்பார்வையிட 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.