கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்கள் சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என்று மனு கொடுதுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாலுகா மாடப்பள்ளி காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாமை நாகராஜ் தலைமையில், கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மாடப்பள்ளி காலனியில் 5 ஆயிரம் நபர்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக 7 சென்ட் நிலம் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த பகுதிகளில் உள்ள ஒருவர் இறந்தால் கூட ஏற்கனவே புதைத்த குழியில்தான் மீண்டும் தோண்டி புதைக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. எனவே சடலத்தை புதைக்கும் போது அந்த இடத்தில் இருந்து மற்றொரு பிணத்தின் எலும்புக்கூடுகள் வெளியே வருவதனால மிகவும் சிரமமாக இருக்கின்றது.
இதனால் சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என்றும் எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் இருப்பதனால் அவர்களுக்கு விளையாட சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.