பெங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,
தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பில் இருந்த மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைத்தில் பார்வையாளர்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.