Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!


ஏரியில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்ற 7 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் – சுஜாதா என்ற தம்பதிகளுக்கு பிறந்த மகன் திலீப் குமார் (7 வயது). இவர் பூண்டி ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திலீப் குமார் சேற்றில் மாட்டிக்கொண்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால், வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்துள்ளார். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் பொது மக்களிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

7-year-old boy dies after bathing in lake

தகவல் அறிந்த பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடியபோது சிறுவன் ஆழமான சேர்த்து பகுதியில் சிக்கி இருந்தது தெரியவந்தது. மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்ட பொதுமக்கள் பட்டரைபெரும்புதூரை சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சுகாதார நிலைய செவிலியர் சிறுவனை பரிசோதித்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |