Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை… அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய விடமால் தடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். மருத்துவ பணியாளார்களை அவசர சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |