Categories
தேசிய செய்திகள்

70 ஆண்டுகளில் சேர்த்து வைத்ததை…. ஏழே ஆண்டுகளில் விற்றுவிட்டது…. ராகுல் கடும் விமர்சனம்…!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது.  அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் திட்டத்தை விமர்சித்த ராகுல்காந்தி, 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்து வைத்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மத்திய அரசு மொத்தமாக விற்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு விற்று விட்டது என்று குற்றம் சாட்டிய அவர், அரசின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |