தற்போது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மேகி, கிட்கேட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறையில் மிகப்பெரிய நிறுவனமாக நெஸ்லே உள்ளது. அதிலும் குறிப்பாக காப்பி பிரியர்களுக்கு காப்பியாக சன்ரைஸ் உள்ளது. அதனையும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே தான் தயாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஏராளமான பானங்களையும் தயாரிக்கிறது.
அந்நிறுவனத்தின் 70 சதவீத தயாரிப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 37 சதவீத தயாரிப்புகள் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.