Categories
மாநில செய்திகள்

70% மானியத்துடன் 3,000 பம்புசெட்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதல்வரின் சூரிய பம்புசெட் அமைக்கும் திட்டத்தில் 70% மானியத்துடன் 3,000 பம்பு செட் தர ரூபாய் 65.34 கோடி ஒதுக்கீடு. 145 சூரியசக்தி உலர்த்திகள் வழங்க ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவது வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும்.

Categories

Tech |