70 வருட போராட்டத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் மீண்டும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1946 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றது. அந்த நேரத்தில் எலிசபெத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் இரண்டு குழந்தைகளையும் போலாந்து நாட்டிலுள்ள இரண்டு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து எடுத்துக் கொண்ட நபர்கள் அந்த குழந்தையை தத்து குழந்தை என்பதை கூறாமலேயே வளர்த்து வந்துள்ளனர். அதில் ஜார்ஜ் என்கின்ற பையன் 17 வயது இருக்கும் பொழுது ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக தனது பிறந்த சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்து பார்க்கும் பொழுதுதான், தான் ஒரு தத்து குழந்தை என்பதே அவருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் தனக்கு ஒரு இரட்டை சகோதரர் இருக்கின்றார் என்பதை தெரிய வந்துள்ளது. இதை அனைத்தையும் சொல்லாமல் மறைத்து வளர்த்து வந்ததால் அந்த குடும்பத்தில் சண்டை போட்டுவிட்டு தனது சகோதரரை தேட ஆரம்பித்துள்ளார் ஜார்ஜ். அதைத்தொடர்ந்து கலிஃபோர்னியாவிற்கு சென்று தனது சகோதரரை தேட ஆரம்பித்தார் அப்போதுதான் ஒரு உண்மை தெரியவந்துள்ளது. அவர்கள் தனது சகோதரரை போலாந்து நாட்டில் உள்ள மற்றொரு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளார்கள் என்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் போலாந்து நாட்டிற்கு வந்த அவர் ரெட் கிராஸ் என்ற அமைப்பு மூலமாக தனது சகோதரரை தேடுவதற்கு தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். பின்னர் 2015ஆம் ஆண்டு ஒரு வழியாக தனது சகோதரரை ஜார்ஜ் கண்டுபிடித்துவிட்டார். 70 வருடங்களுக்கு பிறகு போலந்து நாட்டில் உள்ள ஏர்போட்டில் தான் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.