இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள். அதிலும் 60க்கும் கீழானவர்கள் 45 விழுக்காட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியபோது: “ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் 63 விழுக்காட்டினர் ஆண்கள், 37 விழுக்காட்டினர் பெண்கள். 8 விழுக்காட்டினர் 18 வயதுக்கு கீழானவர்கள், 13 விழுக்காட்டினர் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 விழுக்காட்டினர் 26 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 விழுக்காட்டினர் 45 முதல் 60 வயதுக்கும், 14 விழுக்காட்டினர் 60-க்கும் மேற்பட்டவர்கள்.
அவர்களில் 70 சதவீதம் ஆண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 50% விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 33 விழுக்காட்டினர் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 10 விழுக்காட்டினர் 26 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், ஒரு விழுக்காட்டினர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த மதிப்பில் 60 விழுக்காடு வெறும் 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ளது. அவை மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் என சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.