Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இடம்பெயர்ந்த 70 காட்டு யானைகள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

70 காட்டு யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகில் இருக்கும் ஜவளகிரி வனப்பகுதிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வரும். இந்நிலையில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த வனப்பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. இந்த காட்டு யானைகள் சந்திரன் ஏரிக்கு அருகில் முகாமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதன்பிறகு பட்டாசுகளை வெடித்து ஜவளகிரி வனப்பகுதியை நோக்கி வனத்துறையினர் யானைகளை விரட்டி அடித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |