திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள வீட்டை நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.