Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

70% OK ஆகிட்டு…! சென்னையில் நாளை முதல்….வெளியான புது அறிவிப்பு …!!

சென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தைப் பெற்று தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்வி அலுவலர் முனியன் கூறியதாவது,சென்னை மாநகராட்சிக்கு கீழ் இயங்கும் 70 பள்ளிக்கூடங்கள் நாளைக்கு திறக்கப்படுகிறது. அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நுழையும் போதிலிருந்து அவர்கள் வெளியில் செல்லும்வரை பாதுகாப்பு அளிக்கப்படும்.

25 மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பறையில் இடைவெளியுடன் உட்கார வைப்போம்.அனைத்து பள்ளிகளும் விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க 10 அலுவலர்கள் இருக்கின்றோம். நாங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்வோம். அங்கு ஏதாவது தவறு இருப்பின் அவற்றை நாங்கள் சரி செய்வோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |