கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் தமிழகம் உள்ளது.
நேற்று நிலவரப்படி, தமிழகத்தில் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல நேற்று மட்டும் 81 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் சென்னை. இங்கு இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக எந்த தொற்று பரவலும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனேவே பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதை நிலையில், கொரோனாவுக்கு 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்களும் குணமடைந்துள்ளனர். இன்றிலிருந்து கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட முதல் மாவட்டமானது ஈரோடு. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்.