இரும்பு நுரையீரல் மூலம் 70 வருடங்கள் உயிர் வாழும் அதிசய மனிதரின் தகவல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் பால் அலெக்சாண்டரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இதனால் மூச்சு விட மிகவும் சிரமபட்டு வந்ததால் உறவினர்கள் பால் அலெக்சாண்டரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இந்த நிலையில் அங்கிருந்த ஒரு மருத்துவர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அப்போதுதான் பால் அலெக்சாண்டருக்கு சிலிண்டர் வடிவிலான ‘இரும்பு நுரையீரல்’ பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 மாதங்கள் பால் அலெக்சாண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த இரும்பு நுரையீரலோடு வெளியே செல்ல முடியாது என்பதால் ‘frog breathing’ என்ற முறையை அவர் கையாண்டார்.
தற்போது இவரது வாழ்க்கை பயணத்தை மிட்ச் சம்மர்ஸ் என்பவர் ஒரு சிறிய ஆவணப்படமாக தயாரித்தார். அதில் பால் அலெக்சாண்டர் கூறியதாவது, “என்னுடைய நிலையை கண்டு அனைவரும் என்னை வெறுத்தனர். என்னுடன் பேசவே தயங்கினர். நான் பள்ளி படிப்பை முடித்த பின், எனது நிலைமை கண்டு கல்லூரியில் என்னை சேர்க்கவில்லை. 2 வருடங்கள் கழித்து பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு கல்லூரில் சேர்ந்து வழக்கறிஞராக பட்டம் பெற்றேன். பின்னர் சில வரலாற்று புத்தகங்களை எழுதினேன். மேலும் உங்களுடைய கடந்தகால இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்படாதீர்கள். ஏனேனில், அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.