உலக வரலாற்றில் மிகவும் வயதான பறவை ஒன்று தனது 70 வயதில் குஞ்சுகளை அடை காத்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வரலாற்றில் மிக பழமையான விஸ்டம் அல்பாட்ராஸ் தனது 70 வயதில் பிப்ரவரி 1ஆம் தேதி மிட்வே அட்டோல் என்ற வட பசிபிக் தேசிய வனவிலங்கு காப்பகத்தில் தனது புதிய குஞ்சை உலகிற்கு வரவேற்றுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேல் ஆண்டுதோறும் அல்பாட்ராஸ் தங்களின் கூடுகளுக்கு திரும்புகின்றன. மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் விஸ்டம் பறவையும் அதன் துணை பறவையான அக்கேகாமாய் என்ற இரண்டும் சேர்ந்து தனது குஞ்சுகளை ஈன்றெடுத்து வருகின்றன.
இதனால் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் இருந்து உயிரியலாளர்கள் அக்கேகாமாய் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைப்பற்றி US Fish and Wildlife service உயிரியலாளர் டாக்டர் பெத் பிளின்ட் அறிக்கையின்படி “இது மிகவும் பழமையான பறவை “என்று தெரியும் என்றார். அல்பாட்ராஸ் இதுவரை 30 குஞ்சுகளுக்கும் மேல் தனது வாழ்நாளில் ஈன்று எடுத்துள்ளதாக யு எஸ் எஃப் டபிள்யூ எஸ்.ஸின் மதிப்பீட்டில் தெரிவித்தனர். 1930களில் என பிற்பகுதியில் இருந்தே அல்பாட்ராஸ் தனிநபரால் அடையாளம் காணப்பட்டு வருகிறது .
அதன்பிறகு நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் 1956 இல் இதனை கண்காணிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கூடு கட்டுவதாக பேர்ட் லைஃப் ஆஸ்திரேலியாவின் விவகார மேலாளர் சீன் டூலியின் தெரிவித்துள்ளார். மேலும் அல்பாட்ராஸ் ஒவ்வொரு ஆண்டும் முட்டையிடுவது இல்லை ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முட்டையிடும் அதுவும் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும் என்று கூறியுள்ளனர். விஸ்டம் இனத்தின் எதிர் காலத்திற்கு ஏற்றவாறு இளமைப் பருவத்திற்கு மாறும் போது ஒவ்வொரு வித்தியாசத்தை ஏற்படுத்தி வருகிறது.