Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழைமை… குடமுழுக்கு விழா… கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர்…!

சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

எடப்பாடி காளியம்மன் கோயில் குடமுழுக்கு! - முதலமைச்சர் வழிபாடு!

அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான முகூர்த்தக்கால் கடந்த 17ஆம் தேதி நடப்பட்டு தினசரி மங்கள இசை முழங்க பல்வேறு பூஜைகள் செய்து வந்தனர். அதன்பிறகு, கடந்த 23ஆம் தேதி புனித அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை களுக்காக காவிரி ஆற்றிலிருந்து குடங்களில் தீர்த்த நீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

குடமுழுக்கு விழாவின் இறுதி கட்டமாக முதலமைச்சரின் தலைமையில் புனித தீர்த்தங்கள் கோவில் கோபுர கலசங்களுக்கு கொண்டுசென்று நீராட்டப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.மேலும் முதலமைச்சர் கோவிலுக்கு வருகை புரிந்து இருப்பதால் கோவிலை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த.

Categories

Tech |