Categories
தேசிய செய்திகள்

700 அடி பள்ளத்தில்… கார் கவிழ்ந்து விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியிலுள்ள பிரேம் மந்திர் அருகில் காலை 8.30 மணி அளவில் ராம்பான் கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்தபோது
இந்த விபத்து நடந்துள்ளது. கார் ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி 700 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை தலைவர்) முப்தி அப்துல் ஹமீத் (32) மற்றும் அவரது தந்தை முப்தி ஜமால் தின் (65) போன்றோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவரது தாயார் ஹஜ்ரா பேகம் (60), மருமகன் அடில் குல்சார் (16) போன்றோர் மீட்கப்பட்டு உதம்பூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் காயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதன்பின் இறந்த 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Categories

Tech |