ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 700 ஆண்டுகளாக இரண்டாவது மாடியில் பேய் இருப்பதாக நம்பி அந்த ஊரில் ஒரு வீட்டில் கூட இரண்டாவது மாடி கட்ட வில்லையாம்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உர்சார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700 ஆண்டுகளாக கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் அந்த வீட்டில் இரண்டாவது மாடி கட்டுவது இல்லையாம் மீறி கட்டினால் அங்கு அமானுஷ்ய செயல்கள் நடப்பதாக கூறுகின்றனர். அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போமியா என்னும் நபரின் கொலையை அடுத்து அவரது மனைவி கிராம மக்கள் அனைவரையும் சபித்துள்ளார்.
இதற்கு பயந்துகொண்டே இங்கு இரண்டாவது மாடி யாரும் கட்டுவதில்லை. இது குறித்து சொல்லப்படும் கதை உண்மையா? இல்லை கற்பனையா என்பது குறித்து கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் கிராம மக்களின் பயம், மூடநம்பிக்கை, மற்றும் புராணக்கதைகளில் சொல்லப்படும் சாபம் போன்றவற்றை நம்பிக்கொண்டு இந்த பாரம்பரியத்தை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்.