மேலை நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி மெக்கால் பிராக். இவர் தான் படிக்கும் காலத்தில் உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்தபோது இவர் செய்த காரியத்தை டிக் டாக் செயலி ஒன்றில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார் தொடர்ந்து பார்ப்போம். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது.
உணவுக்காக என்ன செய்வது என்று தெரியாத சூழலுக்கு தள்ளப்பட்ட அப்போது எனக்கு டேட்டிங் செயலி உதவி புரிந்தது என கூறியுள்ளார். டேட்டிங் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு கலாச்சாரம் திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் முன்பின் தெரியாமல் இருக்கும் காலகட்டத்தில் சந்தித்துக் கொள்வது என்பதாகும். இந்த செயலியை பயன்படுத்தி அவர் 16 நாட்கள் அவருடைய பசியை போக்கியுள்ளார். இவ்வாறான இவருடைய பதிவு அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.