ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் நிறுவனத்துடன் தொடர்புடைய 70,000 நபர்களின் கணக்கை முடக்கியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தினுள் சென்று வரலாற்று மிக்க கலவரத்தை நடத்தியுள்ளனர். இதில் கேபிடல் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கேபிடல் அலுவலகம் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜோ பைடன் வரும் ஜனவரி 20 ஆம் தேதியில் பதவி பிரமாணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அந்த நாளில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் QAnon உள்ளடக்கத்தை பகிர அர்ப்பணிக்கப்பட்டுள்ள 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை மாலை அறிவித்துள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை QAnon உள்ளடக்கத்தை பகிர்ந்துள்ள கணக்குகள் முற்றிலுமாக நீக்கப்படுவதாக கூறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சில காரணங்களுக்காக 70,000க்கும் மேற்பட்டோரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் சந்தை மதிப்பில் 5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இதனிடையே அமேசான் நிறுவனம், QAnon தொடர்பான அனைத்து பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் விற்பனைக்கும் தடை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.