கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி அளிக்க வேலையின்மை உதவித்தொகையை டெல்லி மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லியை சேர்ந்த இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்தப் பதிவு மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் இந்த திட்டத்தை டெல்லியில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்பினால் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், மொபைல் எண்,பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரி என்பதற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கட்டாயம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க டெல்லி அரசின் https://jobs.delhi.gov.in என்ற முகவரிக்கு செல்லவும்.
பிறகு முகப்பு பக்கத்தில் உள்ள job seeker என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கம் திறந்த உடன் அதில் அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு உங்கள் மொபைலில் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் வரும். அதனை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
இப்போது edit or update profile என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஒரு புதிய பக்கம் திறந்த உடன் உங்கள் பதிவு எண், மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
இறுதியாக submit பட்டனை கிளிக் செய்தால் போதும் விண்ணப்ப கோரிக்கையை அனுப்பப்பட்டுவிடும்.
எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.