பிரதமர் திரு நரேந்திர மோதி மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார்.
அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனப்படும் மன்கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் திரு பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று எழுபதாவது மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
காலை 11 மணி அளவில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் திரு மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.