கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேலை செய்த மகப்பேறு மருத்துவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் டின்டால். இவர் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் அந்த சுகாதார மையத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுப்பதையே வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வரை சுமார் 710 பெண்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்திற்காக இவரை காவல்துறையினர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்துள்ளனர். இவரது வீட்டில் இருந்து ஜார்ஜ் எடுத்து வைத்திருந்த சுமார் 1,000 தவறான புகைப்படம் மற்றும் வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே ஜார்ஜ் தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று தொடர்ந்து வாதிட்டு வந்துள்ளார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.
இதனையடுத்து தற்போது இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்ததில் ஜார்ஜ் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கபட்டதால் நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்தது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பல்கலைகழகம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 72,55,24,00,000 தொகையை அபராதமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.