Categories
தேசிய செய்திகள்

71,000 பேருக்கு பணி ஆணை…. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. சூப்பர் திட்டம்…!!!

71,000 பேருக்கு இன்று பணி ஆணை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் இரண்டாம் தவணையாக இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் குஜராத், இமாச்சலம் தவிர்த்து பிற மாநிலங்களில் 45 இடங்களில் காணொலிமூலம் பணியாணை வழங்கப்பட உள்ளது. மத்திய ஆயுதப்படை, ஆசிரியர், செவிலியர், விரிவுரையாளர் என பல்வேறு பணிகளுக்கு நியமனம் நடைபெறுகிறது.

இந்நிலையில், பணி நியமன ஆணைகளை பெறுவோருக்கு பயிற்சி அளிக்கும் திட்டமான கர்மயோகி பிராரம் திட்டத்தை தொடக்கி வைத்து உள்ளார். இதன் வாயிலாக புதிதாக வேலையில் சேர்பவர்கள் ஆன்லைனில் பயிற்சி பெறலாம். கடந்த மாதம் 75.000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Categories

Tech |