Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 கோடி மதிப்பிலான புதிய திட்டம் ! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்…

ராமநாதபுரத்தில் ரூ.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்  முதல்வர் பழனிசாமி.

முதலமைச்சர்  பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்  தொடர்பான ஆய்வுக்கூடங்கள், புதிய திட்ட பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா அங்கு  நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  முடிவுற்ற திட்ட பணிகள்  திறந்து வைப்பது மற்றும்  அரசின் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா இன்று ராமநாதபுரத்தில்  நடைபெற்றது.  72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டும்  விழா இன்று நடைபெற்றது . அதாவது வேளாண் துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, சமூக நலம் மற்றும் சுற்றுலாத்துறை, வணிகவரி மற்றும் பதிவு துறை, பள்ளி கல்வித்துறை போன்ற  7 துறைகளுக்கான புதிய திட்ட பணிகளுக்கு அடிகள் நாட்டப்பட்டது.

அதே போன்று  முடிவுற்ற திட்ட பணிகளை பொருத்தவரை ஊரக வளர்ச்சி,   வேளாண்,  நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் கீழ் நடைபெற்ற  திட்ட பணிகள் முடிவுற்றுள்ளதை   தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார் . மேலும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. அதில்  பயனாளிகளுக்கு பல்லவேறு நலத்திட்டங்களை  முதலமைச்சர் வழங்கினார் .

Categories

Tech |