Categories
உலக செய்திகள்

72 மணிநேரம் தான்…. இடத்தை காலி பண்ணுங்க…. சீனாவுக்கு உத்தரவிட்ட அமெரிக்கா…!!

சீன துணைதூதகரத்தை 72 மணி நேர கெடு கொடுத்து மூடும்படி கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக  பீஜிங்கிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தி, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் நடத்தி, தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்ததல் ஆகிய செயலால், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டது. இதற்கிடையே, ஹுஸ்டன் சீன துணைதூதரக வளாகத்தில் வைத்து சீன அதிகாரிகள் ஆவணங்களை தீயிலிட்டு எரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக பீஜிங்கில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Categories

Tech |