தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் பெட்ரோல் பங்குகளில் உள்ள மோடியின் புகைப்படங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன் முதல் கட்ட தேர்தல் 27ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு தொடர்புள்ள அலுவலகங்களில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள் மற்றும் பாதகைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.
அதனை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் உள்ள மோடியின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.