தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6491 பணியிடங்களுக்கு_க்கான தேர்வை கடந்த செப்டம்பர் 1-ந் தேதி நடத்தியது. இந்த தேர்வை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
இந்நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.இதை WWW.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலலாம் .தேர்வு முடிந்து 72 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.