Categories
தேசிய செய்திகள்

72 வயசு ஒன்னு பெருசு இல்லை…. அந்தரத்தில் சாகசம் புரிந்த பாட்டி…. வைரல்…..!!!!

கேரளாவில் தனது முதிர்ந்த வயதிலும் குழந்தைதையப் போன்று ஜிப்-லைனில் சென்ற வயதான பெண்மணி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோப் கயிறுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைத்தான் ஜிப் லைன் என்று கூறப்படுகிறது.
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதியுள்ளது. அந்த ஜிப் லைனில் 72 வயதுடைய பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார்.

அதாவது சேலை அணிந்து கொண்டு ரோப்கயிறை இறுக்கப் பற்றிக்கொண்டு அந்த வயதான பாட்டி அந்தரத்தில் சறுக்கியபடி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரோப் கயிற்றில் இருந்து இறங்கிய பாட்டி ஆனந்தத்தில் சிரிப்பதுபோல அந்த வீடியோ முடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |