ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் சார்பிலும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுதொழிலாளர் சங்கத்தின் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் நாகேந்திரன், மாநகர செயலாளர் அமர்நாத், நிர்வாகி ராம்குமார், பாலமுருகன், முத்து, சுரேஷ், சண்முகம், கென்னடி, ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் 73 கிலோ எடை உள்ள பிரம்மாண்ட கேக்கை வெட்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளனர்.