Categories
மாநில செய்திகள்

“73 வயது பாட்டி செய்த காரியம்”…. பாட்டிக்கு தில் அதிகம் தான் பா…. குவிந்து வரும் கமெண்ட்கள்…..!!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 73 வயதான பாட்டி பைடி பாலத்தில் டைவ் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து 73 வயதில் மூதாட்டி ஒருவர் கங்கை நதியில் டைவ்  அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசோக் பசோயா என்னும் நபர் அவரது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து கங்கை நதி நதியில் 73 வயதான பாட்டி ஒருவர் எந்தவித பயமும் இல்லாமல் குதிக்கின்றார். அதன் பின் அசால்டாக நீச்சல் அடித்து கொண்டு கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் அதனை பார்த்து கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவிற்கு பாட்டிக்கு தில் அதிகம் தான் பா என கமெண்ட் செய்து அவரை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றார்கள். இது குறித்து அந்த பாட்டி கூறிய போது நான் தான் சிறுவயதில் இருந்தேன் நதிகளில்  நீந்துவதால் யாரும் என்னை பின்தொடர்வதில்லை. தன்னைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் என புன்னகையுடன் தெரிவித்துள்ளார். மேலும் நீர்வரத்து அதிகமாக இருந்த போதிலும் உதவி இன்றி நதியின் கரையை  அவர் பத்திரமாக அடைந்துள்ளார். அவர் ஒரு அற்புதமான நீச்சல் வீராங்கனை என அவரது உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |