Categories
உலக செய்திகள்

73 வருஷத்துல ஒரு தடவ தான் இதை சொல்லிருக்காரு…. மகாராணியின் விருப்பம் வெளிவந்தது…. இந்தோனேஷியா இளவரசரின் வாழ்க்கை வரலாறு….!!

பிரித்தானிய மகாராணியாரின் மீது அவருடைய கணவர் இதுவரை ஒருமுறைதான் புகார் கூறியுள்ளார்.

இந்த நவீன யுகத்தில் திருமணம் முடிந்தால் கணவன்மார்கள் மனைவியை சில விஷயங்களை மையப்படுத்தி குற்றம் கூறுவது வழக்கம். அதாவது தன்னுடைய மனைவி ருசி குறைவாகத்தான் சமைப்பார் என்றெல்லாம் கூறுவார்கள். இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் 73 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவருடைய கணவர் அவரை ஒரே முறை தான் புகார் கூறியுள்ளார். அதாவது Gyles Brandreth என்பவர் மகாராணியாரினுடைய கணவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார்.

இந்நிலையில் Gyles சிடம் சிலர் மகாராணியினுடைய கணவரான இளவரசர் பிலிப்பிற்கு அவரது மனைவியின் மீது ஏதேனும் புகார் உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, மகாராணி தொலைபேசியில் நீண்டநேரம் யாரிடம் பேசுகிறார் என்று இளவரசர் பிலிப்பிடம் Gyles கேட்டுள்ளார். அதற்கு அவர் குதிரைப் பந்தயத்தில் தன்னுடைய முழு ஆர்வத்தை செலுத்துவதாகவும், மகாராணி தனது குதிரைகளைப் பற்றி தான் பந்தய மேலாளரிடம் பேசியிருப்பார் என்று Gyles கூறியுள்ளார். மேலும் தனது மனைவிக்காக பிடித்த வேலையையே விட்டு கொடுத்த இளவரசர் பிலிப் அவர் மீது புகார்கள் கூற சாத்தியமில்லை என்கிறார் Gyles.

Categories

Tech |