Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை…. மணப்பெண் யார் தெரியுமா….? பாட்டியம்மா போடும் கண்டிஷன்ஸ் பாருங்க….!!

73 வயதான ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

கர்நாடக மாநிலத்தில் மைசூர் பகுதியில் 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அது என்னவென்றால் தன்னை விட மூன்று வயது அதிகமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிராமண சமூகத்திலும் மாப்பிள்ளை இருக்க வேண்டும்.

மேலும் தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதால் தனது பெற்றோரும் இறந்து போனதால் நண்பர்கள் உறவினர்கள் யாரும் இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் தற்சமயம் தனிமையில் இருப்பது பயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அதனால் இனி வரும் நாட்களை நல்ல துணையுடன் நிம்மதியாக கழிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து பலரும் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தற்போது 69 வயதான இன்ஜினியர் ஒருவர் ஆசிரியையின் கட்டுப்பாடுகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |