Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 73,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது  பச்சைமுத்து என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 73,000 ரூபாயை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |