சந்திரன் போன்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டுவது அசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் துபாயில் சந்திரன் போன்ற பெரிய சொகுசு விடுதி ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை கனடா மூன் வேர்ல்டு ரிசார்ட் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. அதன்பிறகு சந்திரன் போன்ற கட்டிடத்தை 735 அடி உயரத்தில் உலகமே வியக்கும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் 39,838 கோடி ரூபாய் செலவாகும்.
இந்நிலையில் 10 ஏக்கரில் அமைய உள்ள சந்திரன் போன்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியில் ஹோட்டல்கள், 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், நைட் கிளப், வெல்னஸ் சென்டர், மால், அட்லாண்டிஸ் பால்ம் ஜுமேரியா, சுற்றுலா தளங்கள் போன்றவைகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு மண்டல அளவிலான மீனா லைசென்ஸிற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த லைசன்ஸ் கிடைத்தவுடன் இடம் உறுதி செய்யப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும். இந்த கட்டிடத்தை 2 வருடங்களுக்குள் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த சொகுசு விடுதியின் பணிகள் முடிவடைந்தால் ஒரு வருடத்திற்கு 1 கோடி வேர் வரை வந்து செல்ல முடியும் என்பதால், ஆண்டுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திரன் கட்டிடம் மட்டும் அமைந்துவிட்டால் துபாயின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடமும் துபாயில் தான் அமைந்துள்ளது. இதனுடன் நிலா போன்ற கட்டிடமும் சேர்ந்து வந்தால் துபாய்க்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து விடும். மேலும் நிலா போன்ற சொகுசு விடுதியை துபாயுடன் சேர்த்து ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்கா போன்றவைகளிலும் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர்