Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்னும் 3 நாள் மட்டுமே இருக்கு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களில் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 விளையாட்டு ஒதுக்கீடு, 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் அடங்கும். மார்ச் 30ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத தகுதி உடையோர் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கடைசி தேதி வரை தாமதிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.

Categories

Tech |