Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து… காயமடைந்த 74 பயணிகள் டிஸ்சார்ஜ்…!!

கோழிக்கோடு விமான விபத்தில் மேலும் 74 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் மற்றும் 190 பேருடன் சென்ற 7-ஆம் தேதி இரவு தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாகியது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இது பற்றி மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில், “விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 பயணிகள்  குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |