Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

74 சிலைகள் பறிமுதல் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை..!!

புதுச்சேரியில் தனியார் கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 கடத்தல் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில்  உள்ள தனியார் கட்டடத்தில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டது.

எழுபத்து நான்கு சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் அறுபத்து நான்கு உலோக சிலைகளும், 10 கல்சிலைகளும் இருந்தன. இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த சிலைகளை  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வாகனத்தில் எடுத்து சென்றனர்.

Categories

Tech |