Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74 வயது மூதாட்டி ‘எஸ்கலேட்டரில்’ இருந்து தவறி விழுந்து பலி..!!

சென்னையில் 74 வயது மூதாட்டி எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஜக்டியானி  என்ற 74 வயது மூதாட்டியும்  அவரது நண்பரும் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு அங்கிருந்த  எஸ்கலேட்டரில் இவர்கள் இருவரும் ஏற முயன்றனர் அப்போது இவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

Image result for chennai Eskalator

இந்நிலையில்  அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரமேஷ்  ஜக்டியானி என்ற மூதாட்டி தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இவரது நண்பர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |