ஆந்திராவில் 74 வயதில் குழந்தை பெற்ற மங்கம்மா மூதாட்டி இந்தியாவிலே புது சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதுடைய எர்ராமட்டி மங்கம்மா என்ற மூதாட்டி 1962 ஆண்டு மார்ச் 22_ஆம் தேதி எர்ராமட்டி ராஜா ராவ் என்பவரை மணந்தார். அவருக்கு தற்போது வயது 80 ஆகின்றது. பல ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எனவே ஒரு குழந்தையாவது பெத்தெடுக்க வேண்டுமென்று அவர்கள் பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
கடவுள் கொடுத்த வரமாக அவருக்கு 74 வயதிலும் சிசேரியன் (சி-பிரிவு) அறுவை சிகிச்சை வழியாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் நாட்டிலே அதிக வயதில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் என்ற சாதனையை மூதாட்டி நிகழ்த்தியுள்ளார்.இதற்கு முன் 2017_ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள தல்ஜீந்தர் கவுர் என்ற இடத்தில் வசித்த 72-வது வயது மூதாட்டி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததை மங்கம்மா மூதாட்டி முறியடித்துள்ளார்.