Categories
தேசிய செய்திகள்

கோவிந்தா என்ன சோதனை இது….? 743 பேருக்கு கொரோனா உறுதி…. அதிர்ச்சியில் தேவஸ்தானம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆறு கட்ட ஊரடங்கை  தொடர்ந்து ஏழாவது கட்டமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் வாரம் முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வபோது அங்குள்ள திருப்பதி கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த பட்சத்திலும், பக்தர்களின் தரிசனத்திற்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை.  தற்போது திருப்பதி கோவில் அர்ச்சகர்கள்,

தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி  402 பேர் குணமடைந்துவிட்டதாகவும், 341 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் திருப்பதி கோவிலில் 2.38 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும்  அவர் கூறியுள்ளார். 

Categories

Tech |