Categories
தேசிய செய்திகள்

75வது சுதந்திரதினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை…!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம், சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை அணிந்து பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.  இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Categories

Tech |