சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் வணிக நிறுவனங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை வீட்டின் மாடியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும், கோவில்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. தான்தோன்றி கல்யாண வெங்கடராமன் சுவாமி கோவில்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஒரு சிலர் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்ததை செல்பி எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.