இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட நிகழ்ச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் செஞ்சி கோட்டை தற்போது மூவர்ண நிறத்தில் ஜொலிக்கின்றது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Categories