இந்திய நாட்டின் 25 வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. அதனைப் போற்றும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களில் ஜொலித்துள்ளது. இதற்கென்றே தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களைக் கொண்ட எல்இடி மின் விளக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அது பார்ப்பதற்கு தேசிய கொடியை போல கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது.
மேலும் தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களில் எல்இடி மின் விளக்குகளால் ஓளிரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏராளமானோர் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இது பற்றி பொதுமக்கள் பேசும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலிப்பது மிகவும் ரம்யமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கின்றது எனவும் இது மகிழ்ச்சியை தருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.