75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இதில் காலை தொடங்கிய காவல்துறையினரின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது ராஜாஜி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை 6 மணிக்கு தொடங்கி ஒத்திகை நிகழ்ச்சி 9:00 மணி வரை மேற்கொள்ள இருக்கின்றனர்.