இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவு படுத்தும் விதமாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவுபடுத்தும் விதமாக சென்னை மாவட்டத்திலுள்ள காமராஜர் சாலையில் இருக்கும் போர் நினைவிடத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த சைக்கிள் ஊர்வலத்தை தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.
இந்நிலையில் டி.ஐ.ஜி சைலேந்திரபாபு இந்த சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் காமராஜர் சாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் ஊர்வலம் பழைய மாமல்லபுரம் சாலை, கெட்டிவாக்கம், அடையாறு, திருவான்மியூர், முட்டுக்காடு வழியாக மீண்டும் போர் நினைவிடத்தில் வந்து முடிவடைந்துள்ளது. இந்த சைக்கிள் ஊர்வலத்தில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் ஆண், பெண், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.