தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் எஸ்.வி சேகர், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் ரஜினிகாந்த் தான் தமிழ்நாட்டின் முதல்வர். 15 நாட்களில் தாமாக கட்சி ஆரம்பித்து வெற்றி பெறவில்லையா ? ரஜினிகாந்துக்கு 10 நாள் போதும்…. 10% என்பது பிராமணர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல…. 75 ஜாதிகளுக்கு மேல் அதுல பயனடைகிறார்கள்… அதுல கிறிஸ்டியன் இருக்கிறார்கள், முஸ்லிம் இருக்கிறார்கள், எல்லாரும் இருக்கிறார்களே… அவர்களுக்கு கொடுக்க கூடாதா ? திமுக என்பது இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சி என்று அவர் தெரிவித்தார்.