சென்ற மே மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்கில் 75 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்தது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்தது.
இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் அஜித்தின் வலிமை முதல் இடத்தையும் கேஜிஎஃப் 2 திரைப்படம் இரண்டாவது இடத்தையும் விக்ரம் திரைப்படம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கின்றது. விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக 75 நாட்களை கடந்திருக்கின்றது. மேலும் இதுவரை விக்ரம் படம் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.